ஞாயிறு, 4 மார்ச், 2012

வாழ்க்கையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஆசிரியர்.

புலியை தனது மொபைல் காமராவினால் வீடியோ எடுக்க முற்பட்ட பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு நிகழ்ந்த கதி தான் இது... திடீரெனப் பாய்ந்து புலிகள் தாக்கியதால் தனது வாழ்க்கையையே இழக்கும் அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டார் இந்தப் பள்ளி ஆசிரியர்.
முதலில் கையைக் குறி வைத்த தாக்கிய புலிகள் அப்படியே கையைப் பிடுங்கி விட்டது. படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்..
காட்டில் வாழும் புலிகளை சிறிய கூண்டில் அடைத்து வைப்பதால் ஏற்படும் விளைவே இது என்று வன விலங்கு பாதுகாவலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.





செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

எம்.ஜி.ஆர், சிவாஜி நாகேஷ் மீண்டும் நடித்தாலும் ஆச்சரியமில்லை.

 ஆரம்பிக்கபட்ட நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரஜினியின் கோச்சடையான் திரைப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் கோச்சடையான் படத்தினைப் பற்றிய புதியதொரு செய்தி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அது என்னவென்று ஆதங்கப்படுவது புரிகிறது. மறைந்த நடிகர் நாகேஷ் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதுதான் அது.
இப்படத்தில் புதுமையான வியப்பூட்டும் பல கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறவுள்ளன. இதில் விசேடமாக நாகேஷ் இடம்பெறவுள்ள காட்சிகள் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
படத்தில் வரும் இரண்டு ரஜினிக்கும் இரண்டு நாகேஷ் நண்பாராகத் தோன்றவுள்ளாராம். இதற்கென காதலிக்க நேரமில்லை, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் இடம்பெற்ற நாகேஷினை ஒத்த தோற்றமைப்பை பயன்படுத்தி காட்சிகளை அமைக்க கிராபிக்ஸ் வல்லுனர்கள் திட்டமிட்டுள்ளனராம்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

கண்டிப்பாக பெண்கள் பார்க்க வேண்டிய காணொளி.

லிப்டில் வந்து கொண்டிருந்த சிறுமி ஒருத்தியை அதில் கூட வந்த நபர் ஒருவர் கற்பழிக்க முனைந்துள்ளார்..
ஆனால் அவளோ கறாட்டி எடுத்த பொண்ணாச்சே ..சும்மா அடியோ அடியென அடித்து மண்டை உடைக்கும் பக் பக் காட்சியை பாருங்கள்.


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

தலையை வெட்டியபின்னும் சீறிச்சினக்கும் பயங்கரப்பாம்பு.

இறந்தபின்னும் உயிருடன் இருக்கும் ஆவிகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் ஆனால் உடலில் இருந்து தலையை வெட்டியபின்னும் சீறிச்சினக்கும் பயங்கரப் பாம்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோமா? ஆமாங்க இது உன்மைதான், 
அப்படி ஒரு சம்பவம் உன்மையாகவே நடந்துள்ளது.
ஒரு பெரிய மலைப்பாம்பின் வெட்டப்பட்ட தலையை வீடியோ எடுக்கின்றனர் இங்கு சிலர், முதலில் சாதுவான் அசைவைக் காட்டும் அந்தத் தலை, சொற்ப நேரத்திலே சீனங்கொண்டு சீறிக் கத்துகின்றது, பார்ப்பதற்கே மிகவும் பயங்கராமாக இருக்கும் இந்தக் கானொளி இணையத்தில் வெளிவந்த சில நேரங்களிலேயே சக்கைபோடு போட ஆரம்பித்திருக்கின்றது.





புதன், 8 பிப்ரவரி, 2012

மின்கலத்தில் இயங்கும் வாகனங்களும் அறிமுகம்.

இன்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் பாவனையிலுள்ள போதும் மின்கலத்தில் இயங்கும் வாகனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சக்தி வளம் பாதுகாக்கப்படுவதோடு, சூழல் மாசடைதலும் குறைக்கப்படும் என்பதும் நோக்கமாக காணப்படுகின்றது.
இவ்வாறான வாகனங்கள் ஒருமுறை சார்ஜ் செய்த பின் ஏறத்தாழ 161 கிலோமீட்டர்களே பயணம் செய்யக்கூடியன, அதன்பின் மீண்டும் மின்கலத்தை சார்ச்செய்ய வேண்டும். இதற்காக எரிபொருள் நிரப்பு நிலையம் போன்று மின் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன. இருந்தும் இச்செயன்முறைக்காக ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது..
அதாவது பாதைகளில் சமாந்தரமாக பொருத்தப்பட்டிருக்கும் இரு மின் சுருள்களின் உதவியுடன் வாகனங்களில் காணப்படும் பிரத்தியேக சுருள் இணைவதன் மூலம் இச்செயன்முறை இடம்பெறுகின்றது. இதன் மூலம் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனத்திற்கு 2மீட்டர் இடைவெளியிலுள்ள மின் சுருள்களை சந்திக்கும் இருதடவைக்குள் 10 கிலோவாட்ஸ் மின்சாரம் வழங்க முடியும்..

 

புதன், 1 பிப்ரவரி, 2012

பெருநாட்டில் 3 வயது சிறுவனின் வயிற்றுக்குள் கரு.

சமீபகாலமாக உலகில் நடக்கும் பல்வேறு விசித்திரமான நிகழ்வுகளின் தகவல்கள் அதிகமாக வெளிவருகின்றன. பெரு நாட்டில் 3 வயது சிறுவனின் வயிற்றுக்குள் குழந்தையின் கரு இருப்பதாக தகவல் வந்துள்ளதை அந்நாட்டில் உள்ள சிலாவோ நகரை சேர்ந்த மருத்துவர் கார்லோஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து கார்லோஸ் கருத்து தெரிவிக்கையில், இந்த அசாதாரண விளைவு 5 லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படலாம் எனறும், சிறுவனின் வயிற்றில் இருக்கும் கருவில் மூளை, இருதயம், நுரையீரல், குடல் போன்ற உறுப்புகள் எதுவும் உருவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.






திங்கள், 30 ஜனவரி, 2012

நீங்கள் நம்பினால் நம்புங்கள்.

தலையில் முடி இல்லாதவர்கள் மற்றும் இளவயதில் முடியை இழப்பவர்கள் குறிப்பாக வெளியே செல்ல கொஞ்சம் கூச்சப்படுவது உண்டு. இல்லையேல் தமக்கு முடி குறைவாக இருப்பது குறித்து கவலைப்படுவது உண்டு. இதோ வந்துவிட்டது இன்ஸ்டன் முடி ! இந்த வீடியோவைப் பாருங்கள் உங்களுக்கே புரியும் மேட்டர். இது செயற்க்கை முடிதான். 
ஆனால் அவசரத்துக்கு உதவும் அல்லவா?